Posts

மலபார் கடல் சார் பயிற்சி

நிகழாண்டு மலபார் கடல் சார் பயிற்சி, அக். 8-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.இந்தப் பயிற்சி அக். 18– ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.    இது விசாகப்பட்டி னத்தில் துறைமுகப் பகுதியில் தொடங்கி, பின்னர் தொடர்ந்து கடல் பகுதியில் நடைபெறுகிறது.   கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திய -அமெரிக்க கடற்படைக்கு இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியாக தொடங்கிய மலபார் பயிற்சி யில் பின்னர் ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் இணைந்தன.   இது, இந்திய பெருங்கடல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கும், பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய பன்முக நிகழ்வாகும்.